கோப்புப்படம்
கோப்புப்படம்

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் வருத்தப்படும்: கிரண் ரிஜிஜு

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததை நினைத்து காங்கிரஸ் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததை நினைத்து காங்கிரஸ் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தவறான நேரத்தில் தவறாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பின்னர் வருத்தப்படும்.  கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தில்லியில் இன ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முதல் முறையாக குவஹாட்டியில் சுதந்திரத்துக்கு பிறகு காவல் துறை தலைவர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பிரதமர், வடகிழக்கு மாநில மக்களின் அமைதியை காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பேசியிருந்தார். வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்கு உழைத்துள்ளதால் பிரதமர் மீது வடகிழக்கு மாநில மக்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா கூட்டணியால் எந்த ஒரு பயனும் இல்லை. அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com