
ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கோவா ஆகிய 3 மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் பவனில் இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 28 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மெக்வால், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களைச் சேர்ந்த 48 எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி, பகவத் கராட், மனோஜ் கோட்டாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 8 வடகிழக்கு மாநில எம்.பி.க்களுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.