
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(டிஆர்எஃப்) உடன் தொடர்புடைய பயங்கரவாத கூட்டாளி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு காஷ்மீரின் கெஹ்னுசா பந்திபோராவில் நிறுவப்பட்ட சோதனைச் சாவடியில் ராணுவம் மற்றும் சிஆர்பிஃப் இணைந்து பயங்கரவாதியை கைது செய்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் ஆதிஃப் அமின் மீர் என அடையாளம் காணப்பட்டார். இவர் பந்திபோராவில் உள்ள மஞ்சபோரா அலூசா என்ற இடத்தில் வசித்து வந்தார்.
பயங்கரவாத கூட்டாளி மீர் வசமிருந்த கைக்குண்டு மற்றும் பிற பயங்கர பொருள்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.