அசாம் வெள்ளம்: மேலும் இருவர் பலி; 65,500 பேர் பாதிப்பு!

அசாமில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 65,500 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசாமில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 65,500 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் வெள்ளத்துக்கு மேலும் இருவர் பலியானதை அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதன்மூலம், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 14  ஆக அதிகரித்துள்ளது. அசாமில் 7 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. 

வெள்ள பாதிப்புகள் குறித்து அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: அசாமின் 7 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் தற்போதும் அதிகமாக உள்ளது. நேற்று வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 75,200 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 65,600 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தால் திமாஜி மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 31 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர், சிராங் ஆகிய மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 316 கிராமங்கள் வெள்ளத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் முழுவதும் 5,743.09 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மண் அரிமானம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com