திருப்பதி கோயிலுக்கு செல்வோருக்கு கைத்தடி!

திருப்பதி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு செல்வோருக்கு கைத்தடி!

திருப்பதி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்ததாவது:

அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 5 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுவாா்கள். இரவு 10 மணி வரை பெரியவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

நடைபாதையில் பக்தா்களுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் கைத்தடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வனவிலங்குகளை விரட்டியடிக்கவும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். பக்தா்களை பாதுகாக்க வனத்துறையின் கீழ் நிபுணத்துவ வனப் பணியாளா்களை பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பக்தா்கள் குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டு அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் .விலங்குகளுக்கு உணவு வழங்குவோா் மீதும், உணவு விற்பனை செய்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதசாரிகள் செல்லும் மலைப் பாதைகளில் 500 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படும். சாலையின் இருபுறமும் வேலி அமைப்பது குறித்து வனத்துறையின் மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை சமா்பிப்பாா்கள். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com