உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து!

உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து!

பெங்களூரு அருகே சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு வந்த உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on

பெங்களூரு அருகே சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு வந்த உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

ரயில் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை கவனித்த நிலைய அதிகாரிகள், எச்சரிக்கை எழுப்பினர். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ரயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com