சந்திரயான் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.  
சந்திரயான் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி நிலைவை நோக்கி நெருங்கும் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை நெங்கும் லேண்டரின் சுற்றுவட்டப் பாதை இன்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. 

தற்போது இந்த லேண்டர் நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ, அதிகபட்சம் 134 கி.மீ தொலைவில் பயணித்து வருகிறது. நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடா் பயணத்துக்குப் பிறகு புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தற்போது அது பயணித்து வருகிறது. 

இதற்காக நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயானின் தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனிடையே, உந்து கலனில் இருந்து நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை விடுவிக்கும் பணிகள் வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன.  அதன்படி, நிலவின் தரைப்பகுதிக்கு சந்திரயான்-3 நெருக்கமாக வந்தபோது லேண்டா் வெற்றிகரமாக வெளியேறியது. 

தற்போது உந்துகலன், லேண்டா் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com