
ஹிமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள கோல் அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் படகில் சென்ற 10 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டுள்ளனர்.
கோல் அணையின் நீர்மட்டம் திடீரென அதிகரித்ததால் ஞாயிறு இரவு படகில் சென்றவர்கள் அணையின் நீர்த்தேக்கத்தில் சிக்கினர். உடனே என்டிஆர்எப் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்டிஆர்எப் குழுவினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது கோல் அணையில் சிக்கித் தவித்த 10 பேரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 10 பேரில் ஐந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களும் அடங்குவர்.
கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் திடீரென அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக வெள்ளப்பெருக்கில் படகு சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.