உத்தரகண்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை வெளியிட்ட அறிவிப்பில், 

டேராடூன், பௌரி, நைனிடால், சம்பவத் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹரித்வார், தெஹ்ரி, சாமோலி, உதம் சிங் நகர் மற்றும் பித்தோராகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37 பேர் காயமடைந்தனர். 

இடைவிடாது பெய்த கனமழையால் டேராடூனில் உள்ள புகழ்பெற்ற தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் கோயில் நுழைவுவாயிலில் பகுதியளவு தடைசெய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com