காவல் துறையினர் கைக்கூலிகள்: தில்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விமர்சனம்!

தில்லியில் 16 வயது சிறுமிக்கு அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா என்பவர் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
காவல் துறையினர் கைக்கூலிகள்: தில்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விமர்சனம்!
Published on
Updated on
1 min read

தில்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுவதாக மகளிர் உரிமை ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். 

தில்லியில் 16 வயது சிறுமிக்கு அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா என்பவர் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். நண்பரின் மகள் என்றும் பாராமல், கக்கா செய்த செயலால் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். 

வீட்டில் தங்கிய சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தில்லி அரசின் குழந்தைகள், மகளிா் நலத் துறை துணை இயக்குநா் பிரேமோதய் காக்கா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி சீமா ராணி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அந்த அதிகாரியின் நண்பராவாா். தந்தை உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுமிக்கு பிரேமோதய் காக்கா அடைக்கலம் அளித்தாா். கடந்த 2020-2021 காலகட்டத்தில் அவா் பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் முயன்றுள்ளார். 

மருத்துவமனை சென்ற ஸ்வாதியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சந்திக்க ஸ்வாதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வாயிலில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். 

தொடர்ந்து 24 மணிநேரத்திற்கு மேல் ஆன நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 24 மணிநேரத்திற்கு மேல் ஆகியும் பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவரின் தாயாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. தில்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுகின்றனர். குற்றவாளியை கைது செய்வதில் இந்த தீவிரத்தைக் காட்டவில்லை. எந்தவித அழுத்தமான சூழலும் ஏற்படவில்லை என்பதைக் கூறி அப்பெண்ணுக்கு நம்பிக்கையளிக்கவே அவரை சந்திக்க விரும்புகிறேன். சட்டப்படியான இழப்பீடையும் நீதியையும் பெற்றுத்தர அச்சிறுமியை சந்திக்க வேண்டும். அதற்கு தில்லி காவல் துறை அனுமதிக்க மறுக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறைக்கு இது அவமானகரமான நிகழ்வு. தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனக்கு இரு முக்கிய அழைப்புகள் வந்தது. தில்லியின் இருவேறு இடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அரங்கேறியுள்ளன. அங்கு நான் செல்ல வேண்டும். ஆனால், நிச்சயம் திரும்பி வருவேன். பாதிக்கப்பட்ட சிறுமியை சந்திப்பேன் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com