விமானம் புறப்படும் நேரத்தில் தரையிறங்கிய மற்றொரு விமானம்!: விபத்து தவிர்ப்பு!!

புதுதில்லி விமான நிலையத்தில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானத்திற்கும் புறப்படும் விமானத்திற்கும் ஒரே நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும் இது தொடர்பாக தகவல் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் கண்டறிந்து தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அதே வேளையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து மற்றொரு விமானம் கிளம்ப தயாரானது. இது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தில்லியிலிருந்து பாக்டோக்ரா செல்லும் யுகே 725 விமானம் புதிதாக திறக்கப்பட்ட ஓடுபாதையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் அகமதாபாத்திலிருந்து தில்லிக்கு விஸ்தாரா விமானம், இணையான ஓடுபாதையில் தரையிறங்கிய பின்னர், ஓடுபாதையின் இறுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

இருவருக்கும் ஒரே நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டதைய அறிந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் விஸ்தாரா விமானத்தை புறப்படுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தில்லி-பாக்டோக்ரா விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக ஓடுபாதையிலிருந்து பார்க்கிங் பேவுக்கு திரும்பியது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், சரியான நேரத்தில் நிறுத்தவில்லை என்றால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தற்போது இந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com