சந்திரயான் -3: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து!

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் -3: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

திரெளபதி முர்மு 

சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நேரலையில் கண்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சந்திரயான் -3 திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்.

நரேந்திர மோடி

சந்திரயான் 3 வெற்றியை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். வரலாற்று சாதனை படைத்தது இஸ்ரோ. சந்திரயான் 3 வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு கிடைத்த வெற்றி; நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக் கட்டத் திட்டம்; மாபெரும் சாதனை படைத்திருக்கிறது இஸ்ரோ.

ராகுல் காந்தி

இந்தியாவின் விண்வெளித் திட்டம் புதிய உயரங்களை அளந்து, கனவு காணும் இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. இன்றைய முன்னோடி சாதனைக்காக இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கப்பட்டது  விஞ்ஞானிகளின் புத்திக்கூர்மை மற்றும் கடின உழைப்பின் விளைவாகும்.

மு.க. ஸ்டாலின் 

சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது! சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை. அயராத முயற்சிகள் மற்றும் உழைப்பை செலுத்திய ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com