ஹிமாசலில் கனமழை, நிலச்சரிவு: 2 நாள்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடல்!

ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உள்பட மேலும் 200-க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
ஹிமாசலில் கனமழை, நிலச்சரிவு: 2 நாள்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடல்!

ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உள்பட மேலும் 200-க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுதையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹிமாசலில் கடந்த சில நாள்களாக இடைவிடாது கனமழை பெய்துவருவதால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சோலன் மாவட்டத்தில் 530 சாலைகள் மூடப்பட்டுள்ளது. 

சோலனின் புறநகரில் உள்ள ஷாகல் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் சேதம் ஏற்பட்டு, வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 

பாதுகாப்பு நடவடிக்கையாக சிம்லா நகரத்தின் பாந்தகதி மற்றும் சஞ்சாலி பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

பிலாஸ்பூர் 181 மி.மீ, பெர்த்தின் பகுதியில் 160மி.மீ, சிம்லா 132 மீ.மீ, மண்டி 118 மிமீ, சுந்தர்நகர் 105 மிமீ, பாலம்பூர் 91 மிமீ, சோலன் 77 மிமீ மழையும் இதுவரை பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் இன்னும் பலத்த மழை தொடர்கிறது.

எட்டு மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பிலாஸ்பூர், ஹமிர்பூர், குல்லு, மண்டி, சிம்லா, சோலன், சிர்மௌர், யுனா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் ஆகஸ்ட் 28 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இந்த மாதம் மட்டும் 80 பேர் பலியாகியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மொத்தம் 227 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 38 பேர் மாயமாகியுள்ளனர். 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 

பலத்த மழைக்கு மாநிலத்தில் ரூ .10,000 கோடி இழப்பைச் சந்தித்ததாக அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com