‘சந்திராயன்-2’ தோல்வியே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு காரணம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்

இந்தியாவின் சந்திரயான்-2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு பங்களித்தன என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறினார்.
‘சந்திராயன்-2’ தோல்வியே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு காரணம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்

திருவனந்தபுரம்: நிலவின் தென் துருவத்தில் 'விக்ரம்' லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, இந்தியாவின் சந்திரயான்-2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு பங்களித்தன என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்  விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறினார்.

சந்திரயான்-2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம் சாராபாய் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி, கடந்த ஆக. 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்ட சந்தியான்-3 விண்கலம், 18 நாள்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு, விண்கலனுக்கும் நிலவின் தரைப்பகுதிக்கும் இடையிலான தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

அதன் பிறகு, ‘17 நிமிட சோதனை நேரம்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் வா்ணிக்கப்பட்ட லூனாா் லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், வெற்றிகரமாக நிலவின் தரையில், திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில், புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உலக சாதனை படைத்தது. விண்வெளியில் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, சந்திரயான் -3 லேண்டர், 'விக்ரம்', புதன் மாலை, யாரும் அறிந்திராத நிலவின் தென் துருவத்தைத் தொட்டது. கடந்த 4 ஆண்டுகளில் நிலவை ஆராய்ச்சி செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள 2-ஆவது முயற்சி இது.  

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்திய நான்காவது நாடாகவும் இந்தியா ஆனது.

இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் 'விக்ரம்' லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, இந்தியாவின் சந்திரயான்-2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு பங்களித்தன என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறினார்.

இது குறித்து விஞ்ஞானி நம்பி நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திரயான்-3 திட்டத்தின் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள், "சந்திரயான்-2 இன் ஒவ்வொரு தோல்விக்கும் தீர்வு காணப்பட்டது. அது செயற்கைக்கோள் பிரச்னையாக இருக்கட்டும், நிலைப்புத்தன்மை பிரச்னையாக இருக்கட்டும் அல்லது கூடுதல் தேவை பிரச்னையாக இருக்கட்டும். அனைத்திற்கும் அது அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்தே அதற்கு தீர்வு காணப்பட்டு, சரி செய்யப்பட்டது."

“சந்திரயான்-2 இன் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே சந்திராயன்-3 இன் வெற்றிக்கு பங்களித்தன. அதாவது அன்று கண்ட தோல்வியை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டோம். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான வேலையை தெளிவாக செய்துள்ளனர். சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்பே இது வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம். நம்பிக்கை நிறைவேறியது. அனைவருக்கும் வாழ்த்துகள்,” என்று அவர் கூறினார்.

மேலும் சந்திரயான்-3 பயணம் இஸ்ரோவுக்கு மிகவும் கடினமான ஒன்று என்று கூறிய விஞ்ஞானி, குறிப்பாக நிதிநிலை, நாட்டின் விண்வெளி திட்டத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சந்திரயான் -2 இன் தோல்வி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு. சவால்கள் இருந்தபோதிலும், இஸ்ரோவின் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விஞ்ஞானிகளும் தங்களது முக்கிய பணி நோக்கங்கள் அடையக்கூடியவை என்பதை அறிந்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“இஸ்ரோ, இந்தியா மற்றும் மனித குலத்திற்கும் இது ஒரு மகிழ்ச்சியான சிறந்த நாள். ஒரு வகையில் நாம் சாதித்தது நம்ப முடியாதது. நம்பமுடியாதது என்று நான் கூறும்போது, நம்மிடம் இருக்கும் நிதிநிலை, தோல்விக்குப் பிறகு (சந்திரயான்-2) மற்ற உறுதிமொழிகளையும் கொண்டு, அது நம்மை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. ஆயினும், நாங்கள் பணியின் நோக்கங்களை அடைந்தோம். எனவே அந்த அர்த்தத்தில், இது நம்பமுடியாதது. இது நம்பத்தகுந்தது, ஏனென்றால் இஸ்ரோவில் உள்ள அனைவருக்கும் இது அடையக்கூடியது என்று தெரியும், அவர்கள் அதை அடைந்தார்கள், ”என்று நாராயணன் கூறினார்.

சந்திரயான் - 3 இன் வெற்றி, ஒவ்வொரு இந்தியனையும் உலகத்தின் முன்பு தலைநிமிர வைக்கும் சாதனையை செய்துள்ளது. இதை பகிர்ந்துகொள்ள வார்த்தைகளே இல்லை என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com