ஜியோ மற்றும் ஏர்டெல் டிரைவ் டெலிகாம் வாடிக்கையாளர்கள் உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ தலைமையிலான புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை காரணமாக நாட்டின் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 117.39 கோடியாக அதிகரித்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் டிரைவ் டெலிகாம் வாடிக்கையாளர்கள் உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் ஜியோ தலைமையிலான புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை காரணமாக நாட்டின் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 117.39 கோடியாக அதிகரித்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 22.7 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் 14 லட்சம் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மே-23 இறுதியில் 117.26 கோடியிலிருந்து ஜூன்-23 இறுதியில் 117.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.11 சதவிகிதமாக உள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது மாதாந்திர சந்தாதாரர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சந்தாதாரர்களின் இழப்பால் ஒட்டுமொத்த வளர்ச்சி சற்றே குறைந்தது.

பிஎஸ்என்எல் 18.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களையும், வோடபோன் ஐடியா 12.8 லட்சம் சந்தாதாரர்களையும், எம்டிஎன்எல் 1,52,912 சந்தாதாரர்களையும் இழந்துள்ளன.

ஜூன் மாதத்தில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் வயர்லெஸ் சந்தாதாரர்களின் நிகர சேர்க்கை 3,73,602 இதுவேயாகும்.

அதே வேளையில், மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மே மாத இறுதியில் 85.68 கோடியிலிருந்து 2023 ஜூன் இறுதியில் 86.14 கோடியாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com