கேரளத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை

கேரளத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
கேரளத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை

கேரளத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

கேரள மாநிலம் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் இ-மொபிலிட்டி திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக மாநிலத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2015 முதல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை 2015 இல் 27 ஆக இருந்தது.

தற்போது இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவரப்படி 1,02,334 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கேரளத்தில் 1 லட்சமாவது மின்சார வாகனப் பதிவினை அம்மாநில மோட்டார் வாகனத் துறை நேற்று கொண்டாடியது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1,00,000வது வாகனமாக பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாவியை, கொண்டோட்டியைச் சேர்ந்த கிரண் கே.பியிடம், போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு வழங்கினார்.

அப்போது, மாநிலத்தில் மாசு இல்லாத பசுமை எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது என்றார். மேலும், மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக மின்சார வாகன அதிகளவில் கேரளத்தில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com