
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், இந்து ஆணுடன் சென்றதால் அவர் நடுரோட்டில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் ஆணுடன் சென்றபோது, அதைபார்த்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். தன்னைப் படம்பிடிக்க வேண்டாம் என்று அவரிடம் கூறியபோதும், அதற்கு அந்த நபர் எடுப்பேன் நீ யார் எனக்கு உத்தரவிடுவதற்கு என தரக்குறைவாக பேசியுள்ளார்.
தகவல்களின் படி, ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லீம் பெண்ணை அவமானப்படுத்தியதுடன் கடுமையான வசை சொற்களையும் அந்த கும்பல் பயன்படுத்தியுள்ளது.
அவர்களிடன் இருந்து அப்பெண் தப்பிக்க முயன்றபோது, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், ஹிஜாப்பை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியது.
அவர் தப்பிக்க முயன்றபோது அந்த கும்பலில் இருந்த ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை பிடித்து, முதலில் ஹிஜாப்பை கழற்றிவிட்டு பிறகு கிளம்புங்கள் என்று கூறினார். அந்த கும்பல் அந்த பெண்ணை நடுரோட்டில் வைத்து பட்டப்பகலில் அவமரியாதை செய்தது.
ஹிஜாப் அணிந்த பெண்ணை நடுரோட்டில் வைத்து துன்புறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா, ராகுல், கார்கே பங்கேற்பு!
மேலும் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு கோவிந்தபுரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.