ஜி-20 மாநாடு: ரிக்‌ஷாவில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மேயர்!

ஜி-20 மாநாடு: ரிக்‌ஷாவில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மேயர்!

தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ரிக்‌ஷாவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ரிக்‌ஷாவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

தில்லியில் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜி-20 மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜி-20 மாநாட்டிற்கான பணிகளை அமைச்சர் செளரப் பரத்வாஜ் மற்றும் தில்லி ஆணையர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

அப்போது அங்குவந்த ரிக்‌ஷாவில் ஏறி பயணித்தவாறு ஜி-20 மாநாட்டுக்கான பணிகளை ஆய்வு செய்தனர். உடன் வந்த அதிகாரிகள் அவர்களுடன் நடந்து வந்து, முன்னேற்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com