
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் அவரது ஆர்வம் ஆகியவை அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டும் இல்லாமல், விளையாட்டு உலகில் ஈடுஇணையற்ற வீரராக அடையாளம் காட்டுகின்றன.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீ. தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.