இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி வழங்கப்படுவதாக சிறைத்துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 
இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி வழங்கப்படுவதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான தினமே அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறையில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படு வந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர் அங்கு சென்று நேரில் ஆய்வு செய்து, இம்ரான்கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

அதில், இம்ரான் கானில் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலம், பேன், குரான் புத்தகங்கள், செய்தித்தாள், தொலைக்காட்சி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. 

அதைத்தவிர அவரது உணவுப் பட்டியலில், காலை உணவாக ரொட்டி, ஆம்லெட், தயிர், தேநீர் மதிய மற்றும் இரவு உணவிற்கு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், அரிசி உணவு வழங்கப்படுகிறது. 

மேலும், அவரது விருப்பப்படி வாரத்திற்கு இருமுறை சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் நலனை காக்க 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். 

வாரத்திற்கு இருமுறை அதாவது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 2 முதல் 3 மணி நேரம் குடும்பத்தினர் அவரை சந்தித்துப் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com