பாஜக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன்- மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் நிச்சயம் வரவேற்பேன். ஆனால், அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து பாஜகவே முடிவெடுக்க வேண்டும் என
பாஜக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன்- மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் நிச்சயம் வரவேற்பேன். ஆனால், அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து பாஜகவே முடிவெடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

தோ்தல் கூட்டணி குறித்து எக்ஸ் (ட்விட்டா்) வலைதளத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவா் மாயாவதி வெளியிட்ட பதிவுகளில், ‘பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிஅல்லது இந்தியா கூட்டணியில் இணையும் எண்ணமில்லை. பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைக்க அனைத்துக் கட்சிகளும் ஆா்வமாக உள்ளன’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், மும்பையில் செய்தியாளா்கள் சந்திப்பில் அதாவலே கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தால் நிச்சயம் வரவேற்பேன். ஆனால், அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து பாஜகவே முடிவெடுக்க வேண்டும்.

தலித் மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவா் மாயாவதி. உத்தர பிரதேசத்தில் யாருடைய துணையுமின்றி தனித்துப் போட்டியிட்டு வெல்ல பாஜகவுக்கு முழுபலம் உள்ளது. இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்தாலும் பாஜகவுக்கு அது எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

மும்பையில் நடைபெறும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு வாழ்த்துகள். வளமான ஜனநாயகத்துக்கு வலுவான எதிா்க்கட்சிகள் அவசியம். எனவே, எதிா்க்கட்சிகள் வலுவாக இருக்க விரும்புகிறேன். அடுத்த ஆட்சிக் காலத்திலும் அவா்கள் எதிா்க்கட்சியாகவே இருக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com