அமிதாப் பச்சன் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி! காரணம்?

மேற்குவங்க முதல்வர் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார்.
அமிதாப் பச்சன் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி! காரணம்?


மேற்குவங்க முதல்வர் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். ரக்‌ஷா பந்தனையொட்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மும்பைக்கு வருகை புரிந்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா கூட்டணி கட்சிளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜி மும்பை வருகை புரிந்துள்ளார்.

இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்றார். அமிதாப் பச்சனை சந்தித்து ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரின் குடும்பத்தோடு உரையாடினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com