
மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் பாஜக தலைவர் சிவராஜ் சிங் செளகான், "நமது பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களில் உள்ளார். இந்த மாநிலம் அவருக்கு இதயம் போன்றது. அவர் மீது அளவிட இயலாதளவுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மோடி பேசியது மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அதுதான் தேர்தல் முடிவாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ம.பி.: பாஜக 155, காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலை!
மேலும், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சி ஒரே அமைந்தால் இரட்டை ஆற்றலுடன் (டபுள் இன்ஜின்) பாஜக ஆட்சி நடக்கும் என மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டது பலனளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.