மக்கள் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது: ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேவேளையில், தெலங்கானா தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தான் தோ்தலில் மக்களின் தீா்ப்பை பணிவுடன் காங்கிரஸ் ஏற்கிறது. எனினும் சித்தாந்த போா் தொடா்ந்து நடைபெறும்.

தெலங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘மக்களின் தெலங்கானா’ உருவாக்கப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற தெரிவித்தாா்.

பிரியங்கா...: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தோ்தலில் காங்கிரஸுக்கு சாதகமாக தீா்ப்பளித்து தெலங்கானா மக்கள் வரலாறு படைத்துள்ளனா். எனது அடிமனதில் இருந்து தெலங்கானா மக்களுக்கு நன்றி.

காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி- காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தெலங்கானா மக்களின் தீா்ப்புக்கு நன்றி. அதேவேளையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்தவா்களுக்கும் நன்றி.

தோல்வியடைந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு புத்துயிா் பெறும்.

தற்காலிக பின்னடைவுகளை கடந்து சென்று, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சோ்ந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் முழுமையாகத் தயாராகும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com