2 மனைவிகள், 9 குழந்தைகள், 6 பெண் நண்பர்கள்! மோசடி செய்த சமூக ஊடகப் புள்ளி கைது!

தீபாவளியன்று சொகுசு விடுதியில் தங்கி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். 
2 மனைவிகள், 9 குழந்தைகள், 6 பெண் நண்பர்கள்! மோசடி செய்த சமூக ஊடகப் புள்ளி கைது!


உத்தரப் பிரதேசத்தில் 2 மனைவி, 9 குழந்தைகள் மற்றும் 6 பெண் தோழிகளுக்காக மோசடி செய்துவந்த சமூக வலைதள பிரபரத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.

தீபாவளியன்று சொகுசு விடுதியில் தங்கி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். 

தில்லி சரோஜினி நகரில் உள்ள சொகுசு விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார் அஜீத் மெளரியா. 41 வயதான இவர் தனது இரு மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளுடன் அமர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். 

அங்கு அதிரடியாக நுழைந்த காவல் துறையினர் மெளரியாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இவர், சமூக வலைதளத்தில் விடியோ பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்அவர். அவரின் சமூக வலைதள பயன்பாடே அவரை எளிதில் பிடிக்க காவல் துறைக்கும் உதவியுள்ளது.

பொன்ஸி என்னும் ஆள்சேர்ப்பு மூலம் பண மோசடி, போலி ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு விநியோகிப்பது, காப்பீடு திட்டங்களில் போலி நபர்களை உருவாக்கி மோசடி செய்வது போன்ற குற்றச்செயல்களில் அஜீத் மெளரியா ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய சரோஜினிநகர் காவல் நிலைய அதிகாரி சைலேந்திர கிரி, மும்பையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் அஜீத். மும்பையில் 40 வயதான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். மகன் - மகள் என இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். 2010ஆம் ஆண்டு வேலையிழந்து சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவுக்குத் திரும்பினார் அஜீத் மெளரியா.

தனது சொந்த கிராமத்தில் செய்த குற்றச்செயலுக்காக மெளரியா மீது வழக்குப்பதிவானது. 2016ஆம் ஆண்டில் செய்த குற்றச்செயலுக்காக கிராமத்திலிருந்து வெளியேரிய மெளரியா, 2019-ல் சுஷில் என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

அவர்களுடன் சேர்ந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். மேலும், ஆள்களை சேர்த்துவிட்டு பணமோசடி செய்யும் பொன்ஸி போன்ற போலி நலத்திட்டங்களையும் செயல்படுத்தி மோசடி செய்துள்ளார். 

விசாரணையின்போது மெளரியா இரண்டு வீடுகளைக் கட்டியுள்ளார். அதனை தனது குழந்தைகள் மற்றும் இரு மனைவிக்கும் பரிசாக அளித்துள்ளார். எனினும் தற்போது மெளரியா தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கொள்ளையடிக்கும் பணத்தையும் தனது இரு மனைவிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார். 

அஜீத் மெளரியாவின் செல்போன் உள்பட அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்ததில், அவர் 6 பெண் தோழிகளுடன் நெருக்கமாக இருந்ததையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்களை தனது மோசடிகளுக்கும் பயன்படுத்தியுள்ளார். 

அதிகமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக தோழிகளை நெருக்கமாக்கியுள்ளார். அந்த சமூக வலைதளத்தின் மூலமே காவல் துறையினரும் அவரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com