
தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், தெலங்கானா மாநில முதல்வரும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட காமாரெட்டி தொகுதி, மாநிலத்தின் மிக முக்கியமான ஹாட் ஸ்பாட் எனப்படும் பரபரப்பான தொகுதியாகக் கருதப்படுகிறது.
இங்கு சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா ரெட்டி முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிக்க.. புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது: தமிழ்நாடு வெதர்மேன்
மும்முனைப் போட்டியை சந்தித்த தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் கஜ்வெல் மற்றும் காமாரெட்டி தொகுதிகள் என இரண்டில் போட்டியிட்டுள்ளார்.
கோனாபூர் கிராமம் கேசிஆரின் சொந்தஊர். இந்த கிராமம் அடங்கிய காமாரெட்டியில் சென்டிமென்டாக அவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் சொந்த மண்ணியிலேயே அவர் பின்னடைவை சந்தித்திருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.