மிசோரம்: பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்.
மிசோரம்: பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இவற்றில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நேற்று (டிச.3) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரம் மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.4) காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 21 இடங்கள் தேவை என்னும் நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சோரம் மக்கள் இயக்கம் 24 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

மிசோ தேசிய முன்னணி 7 தொகுதிகளில் வெற்றியடைந்து, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com