ரூ.15,186.64 கோடி மதிப்பிலான சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளது: நிர்மலா சீதாராமன்

ரூ.15,186.64 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

ரூ.15,186.64 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.15,186.64 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் மூலம்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, அதிகளவிலான பணம் வங்கிகளுக்குத் திரும்புகிறது" எனக் கூறினார்.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, 13,978 கடன் கணக்குகளுக்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 11,483 வழக்குகளில் சர்ஃபேசி(SARFAESI) சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, 5,674 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள்(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. 

போன் பேங்கிங்(Phone Banking) மூலம் கடன்பெற விரும்பும் மக்களுக்கு தகுதி போன்றவற்றை பாராமல்  கடன் வழங்கப்பட வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com