
தில்லி : ரயில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவச்’ தானியங்கி அமைப்புமுறை, 139 ரயில்களில் நிறுவப்பட்டு, முழுமையாக செயல்படுகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வடிவமைப்பு மற்றும் தரநிலை ஆராய்ச்சி அமைப்பு இதர 3 மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவச் தானியங்கி அமைப்புமுறையை உருவாக்கியது.
அபாய சிக்னலை கடந்து செல்வது, அதிவேகம், மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளின்போது ரயில் ஓட்டுநரை இந்த அமைப்புமுறை எச்சரிக்கும். அந்த எச்சரிக்கையின்படி, ரயிலை ஓட்டுநா் நிறுத்தவில்லை என்றால், கவச் அமைப்புமுறையில் உள்ள சில பிரத்யேக அம்சங்கள் தாமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி, அதை நிறுத்தச் செய்யும்.
ஒடிஸாவில் சில மாதங்களுக்கு முன் மிகப் பெரிய ரயில் விபத்து நேரிட்ட நிலையில், கவச் அமைப்புமுறையின் தேவை குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘கவச்’ தானியங்கி அமைப்புமுறை, தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இதுவரை 1,465 கி.மீ. வழித்தடத்தில், 139 ரயில்களில் நிறுவப்பட்டுள்ளது.
தில்லி - மும்பை, தில்லி - ஹவுரா ரயில் வழித்தடங்களில் மொத்தம் 3,000 கி.மீ வழித்தடத்துக்கு ‘கவச்’ தானியங்கி அமைப்புமுறை நிறுவ டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், 'கவச்’ தொழில்நுட்ப தயாரிப்பு பணி, 3 இந்திய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.