மிசோரமில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் லால்டுஹோமா!

மிசோரமில் ஆட்சி அமைப்பதற்காக அம்மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டியை நேரில் சந்தித்து ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா உரிமை கோரினார்.
மிசோரமில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் லால்டுஹோமா
மிசோரமில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் லால்டுஹோமா

மிசோரமில் ஆட்சி அமைப்பதற்காக அம்மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டியை நேரில் சந்தித்து ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா உரிமை கோரினார்.

மிசோரம் பேரவைத் தோ்தலில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோ தேசிய முன்னணி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான லால்டுஹோமா புதன்கிழமை காலை ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து, லால்டுஹோமாவின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com