
கோழிக்கோடு: 14 வயது சிறுவன் கடலில் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்துள்ளதாகக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாமுண்டிவலபுலுவைச் சேர்ந்த முகமது சையத் என்கிற சிறுவன் தனது மூன்று நண்பர்களோடு புதன்கிழமை மாலை கடலருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அலைகள் சிறுவர்களை அடித்து சென்றுள்ளது. உடனே மீட்பதற்கான பணி தொடங்கப்பட்டபோதும் மூன்று சிறுவர்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சையத், நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரத்தன் டாடாவையும் விட்டு வைக்காத டீப்ஃபேக் தொல்லை..!
வியாழன் காலை சையத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.