விமானிகள் அசதியால் விமான விபத்துகள் நிகழவில்லை - மத்திய அரசு

விமானிகள் அசதியின் காரணமாக விமான விபத்துகள் ஏற்பட்டதாக, இதுவரை எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தில்லி : விமானிகள் அசதியின் காரணமாக, விமான விபத்துகள் ஏற்பட்டதாக, இதுவரை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (டிச.7) மக்களவையில் விளக்கமளித்தது. 

மக்களவையில் இன்று(டிச.7) மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் விகே சிங் சமா்ப்பித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளின் அடிப்படையில்,  விமானிகளுக்கான பணி நேரம்  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் ஒதுக்கப்படுகிறது.
 
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், தொடர்ந்து இந்த ஒழுங்குமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.    

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சமீபத்தில், விமானிகளுக்காக விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மறுசீராய்வு செய்ததோடு, இதுகுறித்த பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com