பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் தொடர்ந்து தத்தளிக்கும் காஷ்மீர்!

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்துள்ளதாகவும், அதே வேளையில் ஸ்ரீநகரில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாம்களில் ஒன்றான தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலையான மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட் அமைவிடத்தில் வெப்பநிலையானது மைனஸ் 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ள நிலையில் காஸிகுண்டில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

தெற்கு காஷ்மீரின் கோகர்நாக் நகரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குப்வாராவில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

டிசம்பர் 11ஆம் தேதி வரை வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்,  இரவு நேர வெப்பநிலை சற்றே குறையும். டிசம்பர் 12 முதல் 15 வரை, ஜம்மு-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் லேசான மழை அல்லது பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com