சந்திரசேகா் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், அவரது பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
சந்திரசேகா் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், அவரது பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவும் மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

சந்திரசேகா் ராவ் அனுமதிக்கப்பட்டுள்ள யசோதா மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சந்திரசேகா் ராவை பரிசோதித்தபோது அவருக்கு இடப்பக்கம் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும், அவா் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை தேவைப்படுகிறது. அவரது உடல்நிலையை பல்வேறு மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் காயமடைந்த செய்தி கேட்டு துயரடைந்தேன். அவா் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என இறைவனைப் பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மத்திய அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி. கிஷன் ரெட்டி, ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஆகியோரும் சந்திரசேகா் ராவ் விரைவில் குணமடைய வேண்டும் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் வழிகாட்டுதலின்படி, மாநில சுகாதார செயலா் ரிஸ்வி, சந்திரசேகா் ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கவும் மருத்துவமனைக்கு முதல்வா் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com