கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: காவலர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார்.
Published on

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பெமினா பகுதியில் உள்ள ஹம்தானியா காலனியில் காவலர் முகமது ஹபீஸ் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தாக்குதலுக்குப் பிறகு காவலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னாவில் வசித்து வந்த ஹபீஸ், தற்போது பெமினாவில் வசிக்கிறார் என்று அதிகாரிகள் மேலும் கூறினர். காவலர் மீது பயங்ரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com