
தெலங்கானாவின் ராமகுண்டம் நகருக்குக்கு அருகே மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராமகுண்டம் காவல் ஆணையர் ரேமா ராஜேஸ்வரி கூறுகையில்,
ஆந்திரத்தின் அண்டை மாநிலமான பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்தந பமிடில்லா அவினாஷ் என்ற மல்லேஷ்(29) வெள்ளிக்கிழமை அதிகாலை கோதாவரிகானி நகரில் கைது செய்யப்பட்டார்.
ராமகுண்டம் நகரம் கரீம் நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. மல்லேஷ் சிபிஐ(மாவோயிஸ்ட்) குழுவைச் சேர்ந்தவர்.
மல்லேஷ் நர்சிங் பட்டதாரி, 2021ல் மாவோயிஸ்டுகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். கோதாவரிகானியில் சிகாசா குழுவில் பணியாற்றி வந்தார். கட்சி தாள்கள், சுவரொட்டிகள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.