ஜார்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு 6-வது முறையாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
ஹேமந்த் சோரன் (கோப்புப் படம்)
ஹேமந்த் சோரன் (கோப்புப் படம்)

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு 6-வது முறையாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி அமலாக்கத் துறை சுமாா் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு, ராணுவ நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக விசாரிக்க ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அப்போதும் அவா் ஆஜராகவில்லை.

தொடர்ந்து ஜார்கண்ட் முதல்வரை நேரில் ஆஜராக கோரி 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை(டிச.12) நேரில் ஆஜராகக் கோரி 6-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com