தில்லி: கடும் குளிர், காற்றின் தரம்...

குளிர் காலம் தொடங்கியது முதல் குறைந்தபட்ச வெப்பநிலை தில்லியில் பதிவாகியுள்ளது.
கோப்பு
கோப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச.12) அதிகாலை, குறைந்தபட்ச வெப்பநிலை 6.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இதனால் தில்லி மக்கள் கடும்குளிரை எதிர்கொண்டு வருகின்றனர்.

காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 100 சதவீதம் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் குளிர்காலம் தொடங்கியது முதல்,பதிவான வெப்பநிலையில் மிகக் குறைந்த அளவு இது. சில நாள்களாவே கடும் குளிர் நிலவி வருகிற நிலையில், டிச.12 முதல் 17-ம் தேதி வரை 6 டிகிரியிலிருந்து 8 டிகிரி செல்சியஸுக்குள் வெப்பநிலை இருக்கும் எனக் கணித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 333-ஆக பதிவாகி மிக மோசம் என்கிற பிரிவில் இடம்பெற்றுள்ளது.

காற்றின் தரக் குறியீடைப் பொருத்த வரை 50-க்குள் இருந்தால் நன்று என்றும் 100-க்குள் இருந்தால் நிறைவு என்றும் 200 முதல் 300-க்குள் பதிவானால் மோசம் என்றும் 400-க்குள் பதிவானால் மிக மோசம் எனவும் வரையறுக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com