6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த பச்சிளம் குழந்தை மீட்பு!

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 
6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த பச்சிளம் குழந்தை மீட்பு!


ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம் லாரிபலி கிராமத்தில் பயன்படுத்தப்படாத 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் செவ்வாய்க்கிழமை புதிதாகப் பிறந்த குழந்தை சிக்கிக் கொண்டது. குழந்தையின் அழுகை சத்தத்தை கோட்ட கிராமத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையின் மற்றும் மீட்பு குழுவினர் குழந்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழந்தை மீட்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வந்தது.

சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. குழந்தை சம்பல்பூரில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும், தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்று தெரிவித்த போலீசார் , பச்சிளம் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியது எப்படி?,குழந்தையை யாரேனும் ஆழ்த்துளை கிணற்றுக்குள் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com