திபெத்தியர்கள் தாய்நாட்டை விட இந்தியாவில் சுதந்திரமாக உள்ளனர்: தலாய் லாமா

இந்தியாவில், திபெத்தியர்களின் தாய் நாட்டைக் காட்டிலும் சுதந்திரம் உள்ளது என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறினார்.
கோப்புப்படம்/தலாய் லாமா - எக்ஸ் தளப்பதிவு
கோப்புப்படம்/தலாய் லாமா - எக்ஸ் தளப்பதிவு
Published on
Updated on
1 min read

கொல்கத்தா : மும்பையில் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச புத்த மத மாநாட்டில் பங்கேற்பதற்காக, புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள தலாய் லாமா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிக்கிம் தலைநகர் கேங்க்டாக்கில் 3 நாள்கள் தங்கியிருந்த புத்தமதத் தலைவர் தலாய் லாமா, அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள செட்-கியூட் மடாலயத்திற்கு இன்று(டிச.14) வருகை வந்தார்.

சிலிகுரிக்கு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின் தலாய் லாமா வருகை தருவதையொட்டி, அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தலாய் லாமாவின் வருகையொட்டி அசாம், சிக்கிம், பிகார் மட்டுமன்றி அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானிலிருந்தும், சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அவரைக் காண வந்திருந்தனர். 

அப்போது  திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா பேசியதாவது, “திபெத்தியர்களின் சொந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. திபெத்தியர்கள் அகதிகளாக உள்ளனர். ஆனால், இந்தியாவில், திபெத்தியர்களின் தாய் நாட்டைக் காட்டிலும், சுதந்திரம் உள்ளது.

நளந்தா கலாசாரத்துடன் திபெத்திய கலாசாரம் ஒத்துப்போகிறது. அதனால், நாம் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த,  உளவியல் மற்றும் சிந்தனை சார்ந்த அந்த கலாசாரத்தை பாதுகாத்து வருகிறோம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com