
மலப்புரம் (கேரளம்): கர்நாடகத்தில் இருந்து சபரிமலை வந்த பக்தர்கள் பேருந்து மீது ஆட்டோரிக்ஷா மோதியதில் 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
கேரளம் மாநிலம், மலப்புரத்தின் மஞ்சேரி நகரில் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் கர்நாடகத்தில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் வந்த பேருந்து மீது ஆட்டோரிக்ஷா மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் பலியானர்களில் முஹ்சினா மற்றும் அவரது சகோதரி தஸ்னீமா, தஸ்னீமாவின் குழந்தைகளான ரின்ஷா பாத்திமா (7), ரைசா பாத்திமா (3) மற்றும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் அப்துல் மஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது உடல்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தவறுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகளைக் கொன்றுவிட்டோம்!: இஸ்ரேல் ராணுவம்
காயமடைந்தவர்கள் சபீரா, முகமது நிஷாத் (11), அஹ்சா பாத்திமா (4), முஹம்மது அசன் மற்றும் ரைஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மஞ்சேரி போலீசார், பேருந்து ஓட்டுநரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் இருந்த சபரிமலை பக்தர்கள் மற்றொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.