20 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 33% அதிகரித்துள்ளது: கோவா முதல்வர்

கோவா மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) கடந்த 20 ஆண்டுகளில் 33 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 
பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்

கோவா மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) கடந்த 20 ஆண்டுகளில் 33 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 

கோவா விடுதலை தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், 

1961 ஆம் ஆண்டு 450 ஆண்டுக்கால போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து கோவாவை விடுவிக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் விஜய்' வெற்றியைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 19ஆம் தேதி கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு மாநிலம் வளர்ச்சி கண்டு வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) 
33 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே காலகட்டத்தில் தனிநபர் வருமானம் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை அரசு தொடங்கியுள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும், இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 

மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை (என்இபி) 2020ஐ செயல்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில அரசு ஒரு நிறுவனத்தை அமைக்கும் என்றும் சாவந்த் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com