ஓடும் பேருந்தில் தலித் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
உத்தரப் பிரதேசத்திலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் பேருந்தில் தலித் பெண்ணை ஓட்டுநர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


உத்தரப் பிரதேசத்திலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் பேருந்து ஒன்றில் 19 வயது தலித் பெண்ணை இரண்டு ஓட்டுநர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில் அந்தப் பெண்ணை ஓட்டுநர் அறையில் உள்ள படுக்கையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இரண்டு ஓட்டுநர்களும் கூறியுள்ளனர். பேருந்து நகர ஆரம்பித்த பின்னர், கதவை சாத்திவிட்டு பெண்ணை ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக பேருந்தில் ஓடிய பாடலின் சத்தத்தை அதிகமாக வைத்ததுள்ளனர் எனக் காவல் உதவி ஆணைவர் மீனா தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பயணிகள் பேருந்தை நிறுத்தி இரண்டு ஓட்டுநர்களையும் சராமாரியாக தாக்கியுள்ளனர். காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஓராண்டில் 10 கோடி பேர் பயணம்: இண்டிகோ சாதனை!
மேலும், காவல்துறையினர் வருவதற்குள் லலித் எனும் ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். மற்றொரு குற்றவாளி ஆரிஃப் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பிச்சென்ற குற்றவாளி லலித்தை தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...