9 ஆண்டுகளில் மாணவிகள் எண்ணிக்கை 31% அதிகரிப்பு!

2014 - 15 கல்வி ஆண்டு முதல் பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


2014 - 15 கல்வி ஆண்டு முதல் பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பெண் கல்வி உயர்ந்துள்ளது. 

கடந்த 2014 - 25ம் கல்வி ஆண்டுமுதல் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள மாணாக்கர்கள் எண்ணிக்கை 30 கோடியாக உள்ளது. இதில், 26 கோடி பேர் பள்ளி செல்பவர்கள். 4 கோடி பேர் உயர்கல்வி பயில்பவர்கள்.  

நரேந்திர மோடி தலைமையின்கீழ் நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணாக்கர்கள் எண்ணிக்கை 20 - 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் பட்டியலின மாணவிகள் எண்ணிக்கை 50 சதவிகிதம். 

பட்டியலினத்தில் கல்வி வளர்ச்சி விகிதம் 44 சதவிகிதமாகவும், பழங்குடியினத்தில் 65 சதவிகிதமாகவும் உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்திலும் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், பள்ளிகளில் சிறுபான்மை முஸ்லிம் பெண் மாணவர்களின் எண்ணிக்கை 45% அதிகரித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com