ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது: சோனியா காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாடியுள்ளார்.
ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது: சோனியா காந்தி



புதுதில்லி: மக்களவை, மாநிலங்களவையில்  அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 141 உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ஆம் தேதி மக்களவையின் பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென உள்ளே குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இருவா் வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவ்விரு சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

நாடாளுமன்றப் பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடாகக் கருதப்படும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவையில்  அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மேலும் 141 உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவையில்  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 141 உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது என சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சி (சிபிபி) கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில்  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 141 உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சோனியா, "இந்த (நரேந்திர மோடி) அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இத்தனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து (மக்களவை மற்றும் மாநிலங்களவை) இடைநீக்கம் செய்யப்பட்டதில்லை, அதுவும் நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தியதற்காக, இது முற்றிலும் நியாயமான கோரிக்கைகளை" எழுப்பியதற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஆதரித்த சோனியா, “எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் கேட்டதெல்லாம் உள்துறை அமைச்சரின் அறிக்கைதான் என்று சோனியா தெரிவித்தார்.

ரேபரேலி எம்.பி பேசுகையில், அரசாங்கத்தின் பதில் "திமிர்த்தனமானது" என்றும், "இந்த கோரிக்கையின் ஆணவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. டிசம்பர் 13 ஆம் தேதி நடந்தது மன்னிக்கவோ மற்றும் நியாயப்படுத்தவோ முடியாதது.சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவும், சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவிப்பதற்கு பிரதமர் மோடிக்கு நான்கு நாள்கள் ஆகியுள்ளது. மேலும், அவர் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் இது குறித்து பேசியிருந்தார். இதன் மூலம், மோடி மக்களவையின் கண்ணியம் மற்றும் நம் நாட்டு மக்களை அலட்சியம் செய்வதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்"என்று தெரிவித்தார்.

மேலும், "பாஜக இன்று எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்துக்கு எப்படி பதிலளித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன்..." மிக மோசமாக கையாண்டிருப்பார்கள் என்று அவர்  கூறினார்.

ஒரே நாளில் இத்தனை எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com