'ஒற்றைக் கட்சி ஆட்சி': மோடியை சாடிய கார்கே!

பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கட்சியும் ஒற்றைக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கட்சியும் ஒற்றைக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்பிக்கள் அவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

“நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் விளக்கத்தை கேட்ட காரணத்திற்காக 141 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விதிகளை மீறி நாடாளுமன்றத்தில் நுழைந்த 6 பேரையும் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

இந்த விதிகளை மீறலில் ஈடுபட்டவர்களுக்கு பரிந்துரை வழங்கிய பாஜக எம்பியிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. என்ன மாதிரியான விசாரணை இது?

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டிற்கு மூத்த அதிகாரிகள் பொறுப்பேற்காதது ஏன்? அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு திட்டமிட்டுள்ளனர். உளவுத்துறையின் தோல்விக்கு யார் பொறுப்பு?

ஜனநாயகத்தின் புனித தளத்திற்குள் காலணிகளில் புகைக் குப்பிகளை மறைத்து வைத்து பல கட்ட பாதுகாப்பை மீறி எப்படி உள்ளே வந்தார்கள்?

பிரதமரும், அவரது கட்சியும் ஒற்றைக் கட்சி ஆட்சியை நாட்ட்டில் ஏற்படுத்த முயற்சிகின்றது. எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைநீக்கம் மூலம் துல்லியமாக இதை செய்துள்ளார்கள்.

வெட்கக்கேடான பாதுகாப்பு குறைபாட்டிற்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களை தண்டிக்காமல், எம்பிக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து பொறுப்பிலிருந்து தப்பி இருக்கிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளான டிசம்பா் 13-ஆம் தேதி, சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தின் பாா்வையாளா்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளை வீசி, மஞ்சள் நிற புகையை வெளியேற்றி கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து, சில எம்.பி.க்கள் மற்றும் கண்காணிப்பு மற்றும் வாா்டு ஊழியா்களால் அவா்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனா்.

அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகிய இருவரும், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தானாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டுவாறு, புகைக் குப்பிகளை வீசி வண்ண வாயுவை வெளியேற்றினா். இதையடுத்து, சாகா், மனோரஞ்சன், அமோல் மற்றும் நீலம் ஆகியோா் உடனடியாகக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களது கூட்டாளியான விஷால் குருகிராமில் இருந்து கைது செய்யப்பட்டாா். ஜா மற்றும் குமாவத் இருவரும் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com