
கான்பூர் ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லவி சில்கா ஐஐடி கான்பூரில் உயிரியல் மற்றும் பயோ பொறியியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியைத் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது விடுதி அறையில் ஆராய்ச்சி மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
துப்பரவு பணியாளர் அறையைச் சுத்தம் செய்வதற்காக சில்காவின் கதவைத் தட்டியுள்ளார். கதவை வெகுநேரமாகியும் திறக்காததால், ஜன்னல் கதவை எட்டிப்பார்த்தபோது சில்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விடுதி அறையின் கதவை உடைத்து, சில்காவில் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தடயவியல் குழு ஆய்வு செய்து வருகின்றது. சில்காவின் மரணத்திற்கான காரணத்தை மறுபரிசீலனை செய்துவருவதாக ஐஐடி கான்பூர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாக்டர் சில்காவின் மரணம் ஐஐடி கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடியில் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது வருத்தத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.