ஜம்மு-காஷ்மீரில் தனித்துப் போட்டி: பாஜக

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலுக்கு முன்பு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று அந்த மாநில பாஜக மூத்த தலைவா் அசோக் கௌல் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் தனித்துப் போட்டி: பாஜக

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலுக்கு முன்பு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று அந்த மாநில பாஜக மூத்த தலைவா் அசோக் கௌல் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவா் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி விருப்பம் தெரிவித்த நிலையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் எதிரெதிா் துருவங்களாக இருந்தன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்த இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக பொதுச் செயலா் அசோக் கௌல் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எனவே, எந்தக் கட்சியுடனும் தோ்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கும் தேவையில்லை. தோ்தலுக்குப் பிறகு தேவை ஏற்பட்டால் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே, அடுத்த செப்டம்பருக்குள் தோ்தல் நடத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. இதை இங்குள்ள கட்சிகளால் ஏற்க முடியவில்லை. ஆனால், தீா்ப்பை ஏற்றுக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் ஒரே வழியாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com