ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? - ப.சிதம்பரம் கேள்வி

ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதயமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? - ப.சிதம்பரம் கேள்வி



புதுதில்லி: ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதயமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் 22-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் முழுக் கூட்டத்தொடரும் நடைபெற்றது.

வரலாறு காணாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, பாதுகாப்பை மீறி அவைக்குள் இருவா் குதித்து புகைக் குப்பிகளை வீசியது, திரிணமூல் காங்கிஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் இந்தக் கூட்டத்தொடரில் பரபரப்பாக நடைபெற்றன.

மக்களவை பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பதிலளிக்கக் கோரி மக்களவையில் பதாகைகளுடன் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட மேலும் மூன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதனால், மக்களவையில் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 46 எம்.பி.க்களும் என 146 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் மசோதாக்கள் தொடா்பான விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

இதற்கான விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்த புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், வழக்கின் முதல் தகவல் அறிக்கை முதல் தீா்ப்பு வரையில் இணையத்தில் பதிவாகும். வாகனங்களில் மோதிவிட்டு தப்பினால் 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும், அதுவே காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தளா்வும் அளிக்கப்படும்’ என்றாா். இவை ஆங்கிலேயா் ஆட்சிக் கால ஆதிக்க மனப்பான்மையில் இருந்தும், அதன் அடையாளங்களில் இருந்தும் மக்களை விடுவிக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதயமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா?

மூன்று மசோதாக்களில் முந்தைய சட்டங்களில் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் 95 சதவிகிதம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் 99 சதவிகிதம் என 90-95 சதவிகிதம் வரை நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன என்ற உண்மையை கவனியுங்கள்:அந்த உண்மையை யாராவது மறுக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியுமா?.

உண்மையில், அசல் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் மற்றும் சாட்சியச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே மற்றும் ஃபிட்ஸ் ஸ்டீபன் ஆகியோரை அழியாதவர்களாக அரசு மாற்றியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கால காலனித்துவ சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்கவும், மறுவரையறை செய்வதற்கும் கிடைத்த வாய்ப்பு வீணடித்துவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com