காஷ்மீரில் உறைநிலையைத் தாண்டிய குளிர்!

குல்மார்க்கின் உயரமான முகடுகளில் புதிய பனிப்பொழிவு சனிக்கிழமை காலையில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகுதி உறைந்த ஸ்ரீநகர் தால் ஏரி | PTI
பகுதி உறைந்த ஸ்ரீநகர் தால் ஏரி | PTI

ஸ்ரீநகர்: குல்மார்க்கின் பிரபல ஸ்கை விடுதி உள்பட உயரமான முகடுகளில் புதிய பனிப்பொழிவு சனிக்கிழமை காலையில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் வெப்பநிலை இரவு உறைநிலையைத் தாண்டியதாக இருந்தது. காலை முதல் சில டிகிரிகள் உயர்ந்ததால் கடும் பனிச்சூழலில் இருந்து தப்பித்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் உள்பட சில இடங்கள் மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்திலும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

தனித்த இடங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் டிச.27 வரை பெரிதாக வானிலை மாற்றம் எதுவும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே வேளையில் மேகம் மூடிக் காணப்பட்ட வெள்ளிக்கிழமை இரவில் பல இடங்களில் உறைநிலையைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஸ்ரீநகரில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸில் இருந்து மைனஸ் 3.3 டிகிரிக்கு குறைந்தது. குல்மார்க்கில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.

பனி, நீர் வழங்கும் இணைப்பு குழாய்களைக் உறைய செய்துள்ளது. ஏரிகள் உள்பட நீர்நிலைகள் பகுதி உறைந்து காணப்படுகின்றன. சீரற்ற மின் இணைப்பு நிலவுகிறது.

குளிர் மற்றும் வெப்பநிலை மாற்றத்தால் குழந்தைகளுக்குச் சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

‘சில்லா-இ-காலன்’ என்று சொல்லப்படுகிற 40 நாள்களுக்கான குளிர் காலக்கட்டத்தில் இருக்கும் காஷ்மீர், இந்தப் பருவத்தில் குளிர் அலைகளையும் உறைநிலையைத் தாண்டிய வெப்பநிலையையும் எதிர்கொள்ளும், இந்தப் பருவம் ஜன. 31 வரை நீடிக்கும்.

அதன் பிறகு, அடுத்த 20 நாள்களுக்கு ‘சில்லா-இ-குர்த்’ (சிறிய பனி) மற்றும் அதற்கடுத்த 10 நாள்களுக்கு  ‘சில்லா-இ-பாச்சா’ (குழந்தை பனி) ஆகியவை நீடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com